Wednesday, June 30, 2010

பனீர் மட்டர்


தேவையானவை:

பனீர் துண்டுகள் 1 1/2 கப்
பச்சைப்பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 4
பாதாம் பருப்பு 4
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாப் பொடி 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
கொத்தமல்லித்தழை 1/2 கப் (ஆய்ந்தது)
எண்ணைய்,உப்பு தேவையானது

முதலில் செய்து கொள்ள வேண்டியது:

1.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
வடிகட்டி மிக்ஸியில் விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

2.தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எண்ணையில் வதக்கி விழுது போல
ஆனவுடன் தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

3.பாதாம் பருப்பையும் முந்திரி பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரில் போடவேண்டும்.

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
வெங்காய விழுது
இஞ்சி பூண்டு விழுது
பாதாம்,முந்திரி விழுது
மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.நன்றாக வதங்கிய பின்
காரப்பொடி,தனியாத்தூள்
இரண்டையும் சேர்த்து மீண்டும் வதக்கி தக்காளி பேஸ்டை உப்புடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பச்சைப்பட்டாணியை சிறிது தண்ணீருடன் இந்த கலவையில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும்.
கடைசியில் தயிர் சேர்க்கவேண்டும்.
அடுப்பை அணைக்கு முன்பு பனீர் துண்டுகளை பிழிந்து போடவேண்டும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்

6 comments:

GEETHA ACHAL said...

அருமையான குறிப்புடன் புது டெம்பிளேடும் சூப்பராக இருக்கின்றது.......

soundr said...

பாக்க, படிக்க நல்லாயிருக்கு.
ஒரு ப்ளேட் அனுப்பிச்சா, சாப்பிட்டு பாத்தும்
சொல்லுவோம்ல‌

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

Kanchana Radhakrishnan said...

அனுப்பிடுவோம்‌.
வருகைக்கு நன்றி Chidambaram Soundrapandian.

சாந்தி மாரியப்பன் said...

மட்டர் பனீர் நல்லாருக்கு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...