Sunday, January 9, 2011

பாகற்காய் பிட்லை

தேவையானவை:

பெரிய பாகற்காய் 2
வேகவைத்த கொண்டக்கடலை 1/4 கப்     
துவரம் பருப்பு 1/4 கப்
கடலைப் பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
வற்றல் மிளகாய் 6
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


துவரம்பருப்பையும் கடலைப் பருப்பையும் நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது புளித்தண்ணீர்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.
------
ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை மீதி புளித்தண்ணீர்,உப்பு சேர்த்துகொதிக்கவிடவேண்டும்.
சிறிது கொதித்த பின் வேகவைத்த பாகற்காய்,வேகவைத்த கொண்டக்கடலை,வேகவைத்த பருப்புகள் மூன்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.
.இறக்கிய பின் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

13 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

பாகற்காய் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்கும் ரெசிப்பி. அருமை.

Reva said...

romba nallaairukku...ithai thaan thaedikitu irunthaen...
Reva

Kanchana Radhakrishnan said...

நன்றி புவனேஸ்வரி.

.

Kanchana Radhakrishnan said...

// revathi said...
romba nallaairukku...ithai thaan thaedikitu irunthaen...///

செய்து பாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி ரேவதி.

GEETHA ACHAL said...

superba irukku...arumai..

Kanchana Radhakrishnan said...

ரொம்ப நல்லாயிருக்கு Geetha.

Krishnaveni said...

one of my favourites, looks delicious

Kanchana Radhakrishnan said...

Thanks Krishnaveni.

ரவி said...

பாகற்காய் சில சமயம் ரொம்ப கசக்குதே ? அந்த கசப்பு நீக்க முடியுமா ?

ManPreet Kaur said...

nice recipe.
Please visit my blog..

Lyrics Mantra
Ghost Matter
Download Free Music
Music Bol

Kanchana Radhakrishnan said...

பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது புளித்தண்ணீர்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் பாவக்காயின் கசப்புத்தன்மை குறையும்.வருகைக்கு நன்றி ரவி.

Kanchana Radhakrishnan said...

Thanks Harman.

Menaga Sathia said...

உங்கள் குறிப்பு ரொம்ப நல்லாயிருக்கு..கொண்டக்கடலை,கடலைப்பருப்பு சேர்த்து செய்திருக்கீங்க.அடுத்தமுறை இப்படி செய்து பார்க்கிறேன்..

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...