தேவையானவை: பலாக்காய்
பலாக்காய் 1
வெங்காயம் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
புளி 1 எலுமிச்சை அளவு
சர்க்கரை 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
அரைக்க:
வெங்காயம் 1 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் 1/4 கப்
தனியா 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
-----
செய்முறை:
பலாக்காயை தோலை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அப்படியே மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
------
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதனுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். இதனுடன் ஊறின பலாக்காயை வடித்து மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.பலாக்காய் வெந்தவுடன் உப்பு,புளித்தண்ணீர், அரைத்த விழுதுசேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்தபின் சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைக்கவேண்டும்..
11 comments:
very nice n interesting recipe..will try it n let u know..:P
Tasty Appetite
Thanks Jay.
வாவ....கடைசி படம் ரொம்ப temptingஆக இருக்கு...
அடுத்த முறை பிஞ்சுப் பலாக்காயைப் பார்த்ததும் வாங்கிவிட வேண்டியதுதான்.
குறிப்புக்கு நன்றி மேடம்.
வித்தியாசமா நல்லாருக்கு..
super delicious palakkaai curry, looks yumm
பலாக்காய் இதுவரை சமைத்ததில்லை.சூப்பராக இருக்கு.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.
Thanks for coming Krishnaveni.
வருகைக்கு நன்றி asiya omar.
இது வரை செய்ததில்லை
இது முழுசா அப்படியே வாங்கி வந்த பலாக்காய், தோலுடனா சமைக்கனும்.
Post a Comment