Sunday, June 12, 2011

சுரைக்காய் கூட்டு

தேவையானவை:



சுரைக்காய் 1
கடலைபருப்பு 1/4 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
நிலக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


சுரைக்காயை தோலை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கடலைபருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த கடலைபருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவும்..பின்னர் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
சுரைக்காய் வெந்ததும் தேவையான உப்பு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
இறக்கியவுடன் தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கு ஏற்றது.

10 comments:

Geetha6 said...

arumai sister.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha6.

ராமலக்ஷ்மி said...

இஞ்சி, நிலக்கடலை சேர்த்ததில்லை. நல்ல குறிப்புக்கு நன்றி.

ஹேமா said...

யாழில் சமையலுக்கு நிலக்கடலை சேர்ப்பது குறைவு.இல்லையென்றெ சொல்லலாம் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா .

GEETHA ACHAL said...

ரொம்ப சூப்பர்ப்...

Vijiskitchencreations said...

நல்ல ஹெல்தி சப்ஜி. அவசியம் நான் செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி GEETHA ACHAL.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Vijiskitchencreations.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...