Friday, July 22, 2011

தேங்காய் பால் குருமா

தேவையானவை:

தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

அரைக்க:

தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இந்த குருமா இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றிற்கு சிறந்த side

10 comments:

ராமலக்ஷ்மி said...

கொஞ்சம் வித்தியாசமாக ‘சொதி’ என செய்வோம் எங்கள் ஊர் பக்கத்தில். இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன். நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய அயிட்டம்...

ஹேமா said...

கொஞ்சம் இனிப்பாயிருக்குமோ.
குழந்தைகளுக்கு பிடித்தமானதாவும் உறைப்புக் குறைவானதாவும் இருக்கும்.செய்து பாக்கிறேன்.
இப்பல்லாம் தேங்காய்ப்பால் மணம் பிடிக்குதில்லை !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா.

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு..

ஸாதிகா said...

அருமையான சைட் டிஷ் காட்டியமைக்கு மிக்க நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி S.Menaga

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா

21. மிளகு குழம்பு

 தேவையானவை: சின்ன வெங்காய ம்10 பூண்டு பல்  10      புளி எலுமிச்சையளவு மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் வெல்லத்தூள் 1 டேபிள்பூன் உப்பு தேவையானது நல்லெண...