Sunday, August 28, 2011

கொழுக்கட்டை



  விநாயக சதூர்த்திக்கு தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.

மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.

தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்



செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.

உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு




செய்முறை:

1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

8 comments:

Jaleela Kamal said...

இரண்டு வகை கொழுக்கட்டைகளும் மிக அருமை

மதுரை சரவணன் said...

sariyaana neraththil sariyaana theervu intha kolakkattai.. vaalththukkal

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன்.

மனோ சாமிநாதன் said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

1 6:46 PM



மனோ சாமிநாதன்said...
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்க்கவும்.//

வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி மனோ .

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மாய உலகம்.

ஸாதிகா said...

இந்த மாதம் வித விதமான கொழுக்கட்டை ரெஸிப்பிகள்.இரு வித கொழுக்கட்டை வகைகளும் அருமை.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...