Monday, November 7, 2011

பாலக்....காராமணி....STEW.




தேவையானவை:
காராமணி 1/2 கப்
பாலக்கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டை 1 துண்டு
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
தக்காளி 1
தேங்காய் பால் 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
உலர்ந்த திராட்சை 5
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
அரைக்க:
பூண்டு 4 பற்கள்
குங்குமப்பூ 1/2 தேக்கரண்டி 
------
செய்முறை:
காராமணியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
பாலக் கீரையை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் தெளித்து Microwave 'H'" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்து வைக்கவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பூண்டு,குங்குமப்பூ இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டை, சீரகம்,மிளகுதூள் வதக்கி காராமணி,பாலக்கீரை.பூண்டு குங்குமப்பூ விழுது,வெங்காயம் தக்காளி விழுது,சிறிது உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.திராட்சையை சேர்க்கவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவும்.

6 comments:

ஆமினா said...

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

ஹேமா said...

உங்க சமையல் குறிப்பையும் படத்தையும் பார்த்து அட...இப்பிடியெல்லாம் சமையல் இருக்கான்னு அதிசயமா பாத்துக்குவேன்.அதுமாதிரித்தான் இண்ணைக்கும் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஆமினா .

Kanchana Radhakrishnan said...

ஹேமா said...
உங்க சமையல் குறிப்பையும் படத்தையும் பார்த்து அட...இப்பிடியெல்லாம் சமையல் இருக்கான்னு அதிசயமா பாத்துக்குவேன்.அதுமாதிரித்தான் இண்ணைக்கும் !//

நன்றி Hema.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. பாலக் அடுப்பில் கூடுதலாக வெந்து சத்து இழக்கும் வாய்ப்பு மைக்ரோவில் வைத்தால் குறையும்தான். அதையும் முயன்று பார்க்கிறேன். மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...