Friday, March 2, 2012

பைனாப்பிள் ஸ்வீட் கிச்சடி




தேவையானவை:
அன்னாசிப்பழம்1 (பழுத்தது)
தேங்காய் துருவல்1 கப்
மிளகாய் தூள்1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
சீரகம்`1 தேக்கரண்டி
சர்க்கரை 2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்1மேசைக்கரண்டி
கடுக்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
கறிவேப்பிலை 1 கொத்து
--------
செய்முறை:

அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சீரகத்தை தேங்காய் துருவலுடன் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அன்னாசிப்பழத் துண்டுகளை மிளகாய் தூள்,மஞ்சள்தூள் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பழத்துண்டுகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரக விழுதையும் சர்க்கரையையும் சேர்க்கவும்.
பழம் குழைந்து வரும்போது தயிரை ஊற்றி கிளறி இறக்கவும்.

தேங்காய் எண்ணெயில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து  சேர்க்க பைனாப்பிள் ஸ்வீட் கிச்சடி ரெடி.

11 comments:

கூகிள்சிறி said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

ஸாதிகா said...

பைனாப்பிளில் பச்சடியா..ஆஹா..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

அம்பலத்தார் said...

வித்தியாசமான பைனாப்பிள் கிச்சடி செயல்முறையை மனைவியிடம் காமிக்கிறேன்.ருசிக்கக்கிடைக்கிறதா பார்க்கலாம்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அம்பலத்தார்.

ADHI VENKAT said...

பைனாப்பிள் ஸ்வீட் பச்சடி பிரமாதம்...

Kanchana Radhakrishnan said...

Thanks கோவை2தில்லி.

Vijiskitchencreations said...

yum kichadi. I luv it.

ஹேமா said...

அன்னாசி எனக்கு நிறையப் பிடிச்ச பழம்.வெக்கை காலத்துக்கேற்றபடி சொல்லியிருக்கிறீங்கள்.இங்க இன்னும் குளிர்தான்.வெக்கை வரட்டும் !

Kanchana Radhakrishnan said...

// Vijiskitchencreations said...
yum kichadi. I luv it.//


வருகைக்கு நன்றி Vijiskitchencreations.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
அன்னாசி எனக்கு நிறையப் பிடிச்ச பழம்.வெக்கை காலத்துக்கேற்றபடி சொல்லியிருக்கிறீங்கள்.இங்க இன்னும் குளிர்தான்.வெக்கை வரட்டும் !//

வருகைக்கு நன்றி Hema.

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...