Sunday, May 6, 2012

வெய்யிலுக்கு....மில்க் ஷேக்....


..
1.ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையானவை
ஸ்ட்ராபெர்ரி 1 கப் (பொடியாக நறுக்கியது)
பைன்-ஆப்பிள் துண்டுகள் 1/2 கப்
மலை வாழைப்பழம் 2
பால் 1 கப்
தூளாக்கிய ஐஸ்கட்டி சிறிதளவு
சர்க்கரை தேவையானது


செய்முறை:
மேற்கூறிய எல்லாப் பொருட்களையும்  மிக்சியில் நைசாக அரைக்கவும்.
-----------------
2.வாழைப்பழ மில்க் ஷேக்

தேவையானது:
வாழைப்பழம் 2
பால் 1 கப்
தயிர் 1/4 கப்
தேன் 1 மேசைக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் சில துளிகள்

செய்முறை:
மேற்கூறிய எல்லா வற்றையும் மிக்சியில் அடிக்கவேண்டும்.
------------
3.மாம்பழ லஸ்ஸி
தேவையானவை:
மாம்பழ துண்டுகள் 2 கப்
பால் 1 கப்
சர்க்கரை தேவையானது
புதினா இலை சிறிதளவு
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
உப்பு 1 சிட்டிகை

செய்முறை:
மேற்கூறிய எல்லாவற்றையும் மிக்சியில் அடிக்கவேண்டும்.
இந்த மில்க் ஷேக் இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையாக இருக்கும்.
----------
 4.வெள்ளரிப் பிஞ்சு மில்க் ஷேக்

தேவையானது:
வெள்ளரிப் பிஞ்சு 4
பால் 1 கப்
தண்ணீர் 1/2 கப்
தேன் அல்லது சர்க்கரை தேவையானது
உப்பு 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெள்ளரிப் பிஞ்சுகளை பொடியாக நறுக்கிக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்..
அதனுடன் பால்,தண்ணீர்,சர்க்கரை,உப்பு சேர்த்து மிக்சியில் அடிக்கவேண்டும்.
இந்த மில்க் ஷேக் வெய்யிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

11 comments:

ராமலக்ஷ்மி said...

அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கிற நேரத்தில் ஜில் எனும் குறிப்புகள் நான்கைத் தந்திருக்கிறீர்கள். அருமை. நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி.

ஸாதிகா said...

சமயத்திற்கு ஏற்ற அருமையான குறிப்பு.

ஹேமா said...

இன்னும் இங்க வெயிலைக்
காணோமே !

Radha rani said...

வெயிலுக்கு ஏற்ற குளுமையான ஆரோக்கியமான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

//
ஸாதிகா said...
சமயத்திற்கு ஏற்ற அருமையான குறிப்பு.//

நன்றி. ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
இன்னும் இங்க வெயிலைக்
காணோமே !/

:-)))

Kanchana Radhakrishnan said...

// ராதா ராணி said...
வெயிலுக்கு ஏற்ற குளுமையான ஆரோக்கியமான குறிப்பு.//

வருகைக்கு நன்றி ராதா ராணி.

VijiParthiban said...

மிகவும் அற்புதம் அக்கா உங்களுடைய வெயிலுக்கு ஏற்ற குறிப்பு .

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

Jaleela Kamal said...

அட்டகாசமான அடுப்படிகள்
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_21.html
உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...