Thursday, August 9, 2012

கடப்பா




தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் 1/4 கப்
பூண்டு 4 பல்
கசகசா 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
------
செய்முறை:


பயத்தம்பருப்பை இரண்டு கப் தண்ணீருடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (நான்கு விசில்)
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீட்ட வாக்கில் நறுக்கிகொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வேகவைத்த பயத்தம்பருப்பு,தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பின் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.

இந்த ' கடப்பா ' தோசை,இட்லி,பூரி ஆகியவற்றிற்கு சிறந்த side dish.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதான குறிப்பு... நன்றி சகோதரி...

(கடப்பா... ஊர் பேர் கேள்விப்பட்டதுண்டு... )

தொடருங்கள்... நன்றி…

VijiParthiban said...

அருமை அக்கா நல்ல ஒரு அழகான சமையல் பதிவு கடப்பா சூப்பர் ...

Kanchana Radhakrishnan said...

// திண்டுக்கல் தனபாலன் said...
எளிதான குறிப்பு... நன்றி சகோதரி.../

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

virunthu unna vaanga said...

nicely done...
Happy krishna jeyanthi...
VIRUNTHU UNNA VAANGA

ஸாதிகா said...

புதுவித குறிப்பு

Kanchana Radhakrishnan said...

// VijiParthiban said...
அருமை அக்கா நல்ல ஒரு அழகான சமையல் பதிவு கடப்பா சூப்பர் ...//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Viji Parthiban.

Radha rani said...

பூரி, சப்பாத்திக்கு நல்லபொருத்தமானது.

Kanchana Radhakrishnan said...

// Vijayalakshmi Dharmaraj said...
nicely done...
Happy krishna jeyanthi...//

Thanks Vijayalakshmi Dharmaraj

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
புதுவித குறிப்பு//

Thanks ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

//ராதா ராணி said...
பூரி, சப்பாத்திக்கு நல்லபொருத்தமானது.//

வருகைக்கு நன்றி
ராதா ராணி.

ராமலக்ஷ்மி said...

இதுவரை அறிந்திராதது. பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

கடப்பா பெயர் கேள்விபட்டிருக்கிறேன்.குறிப்பு சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
இதுவரை அறிந்திராதது. பகிர்வுக்கு நன்றி./


வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...


//Asiya Omar said...
கடப்பா பெயர் கேள்விபட்டிருக்கிறேன்.குறிப்பு சூப்பர்.//


வருகைக்கு நன்றி Asiya Omar.

Radha rani said...

சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளுங்கள்.

Kanchana Radhakrishnan said...

விருதுக்கு நன்றி ராதா ராணி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...