Monday, September 3, 2012

பருப்பு உருண்டைக் குழம்பு




தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைபருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
சோம்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்ற்ல் 2
பச்சைமிளகாய் 2
தனியா தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
------
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி

      பருப்பு உருண்டைகளை ஆவியில் வைத்து எடுத்தது


செய்முறை:

துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.இதனுடன் அரைக்கக்கொடுத்துள்ள சோம்பு,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்.
தனியாதூள்,வெங்காயம் (1) பூண்டு (2 ) பல் எல்லாவற்றையும் உப்புடன்  நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காய் துருவல், கசகசா இரண்டையும் தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  துவரம்பருப்பு,கடலைபருப்பு விழுது,கறிவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக்கி குக்கரில்  ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் மீதமுள்ள வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி மஞ்சள். தூள்,மிளகாய் தூள்  சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தேங்காய் துருவல்,கசகசா விழுதினை சேர்க்க வேண்டும்.
கடைசியில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
(பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.)

14 comments:

Jaleela Kamal said...

மிக அருமை ,

அமுதா கிருஷ்ணா said...

அருமை.நைசாக அரைக்காமல் கொர,கொரப்பாக அரைத்தால் வழு வழுவென்று இல்லாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.

virunthu unna vaanga said...

superb... my ammachi spl...
VIRUNTHU UNNA VAANGA

Kanchana Radhakrishnan said...


// Jaleela Kamal said...
மிக அருமை//

வருகைக்கு நன்றி Jaleela.

ஸாதிகா said...

எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் அருமை... நன்றி சகோதரி......

Kanchana Radhakrishnan said...

// அமுதா கிருஷ்ணா said...
அருமை.நைசாக அரைக்காமல் கொர,கொரப்பாக அரைத்தால் வழு வழுவென்று இல்லாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.//

வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா .

Kanchana Radhakrishnan said...

//ijayalakshmi Dharmaraj said...
superb... my ammachi spl...
VIRUNTHU UNNA VAANGA..

Thanks vijayalakshmi Dharmaraj.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான குறிப்பு. உருண்டைகளை வேக வைத்து எடுப்பது ஆரோக்கியமும்.

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்//

Thanks ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
விளக்கங்கள் அருமை... நன்றி சகோதரி......//

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான ருசியான குறிப்பு..

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
மிக அருமையான குறிப்பு. உருண்டைகளை வேக வைத்து எடுப்பது ஆரோக்கியமும்.//

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

// அமைதிச்சாரல் said...
அருமையான ருசியான குறிப்பு..//

நன்றி அமைதிச்சாரல்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...