Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Friday, April 12, 2013
மாங்காய்-வேப்பம் பூ பச்சடி
வாழ்க்கை என்பது..இன்பமும்..துன்பமும் கலந்தது என்பதை உணர்த்தவே..சித்திரை மாத பிறப்புக்கு இனிப்பும்..சற்றுக் கசப்பும் உள்ள இந்த பச்சடிகள் செய்வது வழக்கம்
மாங்காய் இனிப்பு பச்சடி:
தேவையானவை:
மாங்காய் 1
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
உப்பு தேவையானது
செய்முறை:
மாங்காயை தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்சிறிது தண்ணீர் விட்டு மாங்காய் துண்டுகள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைந்து சேர்ந்த பின் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும் .அடுப்பை அணைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து கொட்டவும்.
வேப்பம் பூ பச்சடி
தேவையானவை:
வேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன்
புளி எலுமிச்சைஅளவு
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
அரிசி மாவு 1 டீஸ்பூன்
--
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 3
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வேப்பம் பூ சிறிது எண்ணைய் விட்டு நல்ல கறும் சிவப்பாக வறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கிள்ளிய மிளகாய்வற்றல்.பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்துவிடவும்.உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்தபின் அரிசிமாவை கரைத்துவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கும் பொழுது வறுத்த வேப்பம் பூவை போடவேண்டும்.
(இரண்டும் சேர்த்து ஒரே பச்சடியாக செய்வோரும் உண்டு)
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Subscribe to:
Post Comments (Atom)
28. அவரைக்காய் புளி குழம்பு
தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி 1 பூண்டு 5 பற்கள் துருவிய தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...
-
தேவையானவை: சேம்பு இலை 4 உப்பு,எண்ணெய் தேவையானது ------- அரைக்க: துவரம் பருப்ப் 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் பயத்தம்பருப்பு 1/2 க...
-
தேவையானவை: இட்லி ரவா 2 கப் ஜவ்வரிசி 1 கப் தயிர் 2 கப் தண்ணீர் 2 கப் துருவிய தேங்காய் 1/2 கப் ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்...
-
தேவையானவை: குடமிளகாய் 2 துவரம்பருப்பு 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் மிளகாய் வற்றல் 4 பெருங்காயம் 1 துண்டு மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் க...
15 comments:
வேப்பம் பூ பச்சடி செய்முறைக்கு நன்றி சகோதரி...
மாங்காய் வேப்பம்பூ பச்சடி என் அம்மா ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் செய்வார்கள். வாழ்க்கை பற்றிய சிந்தனையை நம்முள் உணவின் மூலம் விதைக்கும் முன்னோரின் ஏற்பாட்டை வியக்கிறேன்.
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் காஞ்சனா.
பச்சடிகள் அருமை.
உங்களுக்கு இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
//கீதமஞ்சரி said...
மாங்காய் வேப்பம்பூ பச்சடி என் அம்மா ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் செய்வார்கள். வாழ்க்கை பற்றிய சிந்தனையை நம்முள் உணவின் மூலம் விதைக்கும் முன்னோரின் ஏற்பாட்டை வியக்கிறேன்.//
உண்மை.வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
நா ஊறும் நல்ல தகவலுக்கு நன்றி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவியாழி கண்ணதாசன்.
புத்தாண்டுக்கான செய்முறைகள் அருமை.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
Asiya Omar அவர்கள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்கள்...
/// மீராவின் சமையல் (காஞ்சனா ராதாகிருஷ்ணன் ) அவர்கள் ப்ளாக்கினையும் பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது.அவர்களிடமும் தெரிவிக்கவும் ... //
Visit : http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
//ராமலக்ஷ்மி said...
புத்தாண்டுக்கான செய்முறைகள் அருமை.//
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
// திண்டுக்கல் தனபாலன் said...
Asiya Omar அவர்கள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்கள்...
/// மீராவின் சமையல் (காஞ்சனா ராதாகிருஷ்ணன் ) அவர்கள் ப்ளாக்கினையும் பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது.அவர்களிடமும் தெரிவிக்கவும் ... //
வேறு சிலரும் இப்படி கூறுகிறார்கள்.என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.
எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Bharatanatyam Dancer
Bharatanatyam exponent
Bharatanatyam USA
Bharatanatyam Reviews
Bharatnatyam classes in New Jersey
Dance Schools for Bharatanatyam
Bharatanatyam teachers
Best Bharatanatyam Dancers
Natya shastra scholar
Bharatnatyam classes
Bharatanatyam Karanas
Bharatanatyam Dance Workshop
Dancer Workshop
Workshop for Bharatanatyam Dance
Post a Comment