Thursday, September 5, 2013

பீன்ஸ் கொள்ளு பொரியல்



தேவையானவை:

பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
------
கொள்ளு 1/4 கப்
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் 1 துண்டு
-------
உப்பு,எண்ணெய்   தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:


கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.
கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்
தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.
அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பீன்ஸ் கொள்ளு பொரியல்... நன்றி சகோ...

திண்டுக்கல் தனபாலன் said...

அன்புடன் அழைக்கிறேன் :

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

ஸாதிகா said...

கொள்ளு சேர்த்து வித்தியாசமான பொரியல்

Yaathoramani.blogspot.com said...

கொள்ளுவைசுண்டல் தவிர வேறு
எப்படி பயன்படுத்துவது
என அறியாமல் தவித்து வந்தேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி.

கோமதி அரசு said...

நல்லக் குறிப்பு.
துவரம் பருப்பு போட்டு உசிலி செய்து இருக்கிறேன். கொள்ளு,கடலைப் பருப்பு, பொட்டுகடலை அருமையான சத்து மிகுந்த பொரியல்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்

.வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...

@ ஸாதிகா
.வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

@ Ramani S

கொள்ளு சுண்டலை விட இந்த பொரியல் சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி
Ramani Sir.

virunthu unna vaanga said...

Very very nice and healthy combo poriyal...

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி
.வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு.

துவரம்பருப்பு உசிலியை விட கொள்ளு,கடலைப்பருப்பு,பொட்டுக்கடலை சேர்த்து செய்யும் உசிலியும் பொரியலும் கூடுதல் சுவையோடு இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

@ Vijayalakshmi Dharmaraj.

வருகைக்கு நன்றி Vijayalakshmi Dharmaraj.

சாரதா சமையல் said...

Very nice and healthy poriyal.

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Saratha.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...