Saturday, October 19, 2013

பூண்டு குழம்பு



தேவையானவை:
பூண்டு 20 பல்
சின்ன வெங்காயம் 10
மிளகு 10
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
நெய் 1 டீஸ்பூன்
வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
-------
அரைக்க:

பெரிய வெங்காயம் 1
தக்காளி 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
பெரிய வெங்காயத்தையும்,தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
மிளகை நெய்யில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும் மிளகு பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.

பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உடம்பிற்கு மிகவும் பயன் தரும் குழம்பு... செய்முறைக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ராமலக்ஷ்மி said...

செய்யும் ஆவலைத் தந்தது படமும் குறிப்பும். நன்றி.

கீதமஞ்சரி said...

பார்த்தவுடன் செய்யத்தோன்றியது. இன்று இந்தக்குழம்புதான் செய்யவிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

@ ராமலஷ்மி.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலஷ்மி.

Kanchana Radhakrishnan said...

@ கீத மஞ்சரி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கீத மஞ்சரி.

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...