தேவையானவை:
குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.
6 comments:
இது புதிதாக இருக்கிறது... செய்முறை குறிப்பிற்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தங்களின் குடும்பத்தார்அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Kanchana Radhakrishnan
TV Radhakrishnan
புதிய செய்முறை. விரைவில் செய்துபார்க்கிறேன். நன்றி காஞ்சனா. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வித்தியாசமாக இருக்கு.. செய்து பார்க்கிறேன்..
புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமையாக இருக்கிறது கேப்சிகம் கோசுமல்லி.
Post a Comment