தேவையானவை:
பரங்கிக்காய் துண்டுகள் 2 கப்
பால் 1/2 கப்
பொடித்த வெல்லம் 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
உப்பு 1/2 தேக்கரண்டி
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காயெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
ஒருபாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் வைத்து பரங்கிக்காய் துண்டுகளை வேகவைக்கவும்.
அரிசிமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.
கொதித்தவுடன் பால்,பொடித்த வெல்லம்,உப்பு மூன்றையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கடைசியில் துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால் (கால் கப்) சேர்த்து எல்லாவற்றையும் கலந்து அடுப்பை அணைக்கவும்.
தேங்காயெண்ணையில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
4 comments:
புதுசு புதிசா சொல்றீங்க... செய்து பார்ப்போம்... நன்றி...
வழக்கமாய் அனைத்து இல்லங்களிலும் செய்யக்கூடிய ரெசிபி தான் இது.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
அருமையான பரங்கிக்காய் பால் கூட்டு.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment