தேவையானவை:
பார்லி 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்கம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:
பார்லியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் தனித்தனியே பார்லியையும் பயத்தம்பருப்பையும் வேகவைக்கவேண்டும்.(2 விசில்)
அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தை பொரித்து குறுக்கே வெட்டிய பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த பார்லியையும் பயத்தம்பருப்பையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
கிச்சடி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ பார்லி கிச்சடி ரெடி.
7 comments:
ம்ஹீம்...! இதுவரை செய்ததே இல்லை... நன்றி அம்மா...
கருவுற்றிருந்த போது பார்லி தண்ணீர் குடித்ததோடு சரி...:))
வாங்கி செய்து பார்க்கத் தூண்டியது தங்களின் குறிப்பு.. நன்றி..
@
திண்டுக்கல் தனபாலன்
செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Thanks Adhi.
புதுமையான பார்லி கிச்சடி .
செய்து பார்க்க வேண்டும்.
நன்றி காஞ்சனா.
Idhai seidhu paarkkavendum. Seimurai miga ezhidhaaga irukkirathe!
பார்லி தண்ணீர் இப்போதும் அடிக்கடி சேர்க்கிறேன் மருத்துவர் ஆலோசனையின்படி. இந்த செய்முறை அருமை. செய்து பார்க்கிறேன்.
Post a Comment