தேவையானவை:
கொள்ளு 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
மிளகாய் வற்றல் 2
தனியா 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
---------------
செய்முறை:
கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
கொள்ளை குக்கரில் வைத்து (3 விசில்) எடுக்கவும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
------
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து இஞ்சி பூண்டு விழுதை வதக்கவேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,குறுக்கே வெட்டிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காய்ம் நன்றாக வெந்ததும் வேகவைத்த கொள்ளு,அரைத்த விழுது,தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கவேண்டும்.
கொள்ளு, புரதம்,இரும்பு சத்து நிறைந்த ஒரு முழு உணவு.
6 comments:
சத்தான சுவையான
சமையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
வருகைக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி.
எதோ ஒரு முறையில் "கொள்ளு, வாரம் ஒருமுறை மனதில் கொள்ளு" என்று வீட்டில் சொல்லி விட்டார்கள்... செய்முறைக்கு நன்றி அம்மா...
அருமையான கொள்ளு குருமா.
செய்து பார்க்கிறேன்.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.செய்து பாருங்கள்.
@திண்டுக்கல் தனபாலன்
:-))))))
Post a Comment