தேவையானவை
வரகு அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
நிலக்கடலை 10
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'
செய்முறை:
ஒரு கப் வரகு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்த வரகு .சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.
.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.
வரகு அரிசி எலுமிச்சை சாதம் மிகவும் சுவையுடன் இருக்கும்.
8 comments:
வாயில் நீர் வர வைக்கும் சுவையான சத்தான எலுமிச்சை வரகு சாதம்...
அன்பு நன்றிகள்பா பதிவுக்கு.
அருமையான வரகு அரிசி எலுமிச்சை சாதம்.
பகிர்வுக்கு நன்றி.
உங்களின் முறைப்படி செய்து பார்ப்போம் அம்மா... நன்றி...
@ Manjubashini Sampathkumar
வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி
Manjubashini Sampathkumar.
@ கோமதி அரசு
வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி
கோமதி அரசு.
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
வரகு அரிசியில் எலுமிச்சை சாதம். செய்து பார்க்க வேண்டும்.
வருகைக்கு நன்றி Adhi.
Post a Comment