Tuesday, March 18, 2014

வெஜ் பீஸ் மசாலா

 வெஜ் பீஸ் மசாலா

தேவையானவை:

 பச்சை பட்டாணி 1 கப்
கரம் மசாலா 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க: (1)
வெங்காயம்1
தக்காளி 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
------
அரைக்க: (2)
முந்திரிபருப்பு 5
பாதாம் 5
கசகசா 1 தேக்கரண்டி
-------
தாளிக்க:
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
------
செய்முறை:


பட்டாணியை வேகவைத்துக்கொள்ளவெண்டும். (அல்லது frozen peas வாங்கலாம்)

வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

முந்திரிபருப்பு,பாதாம்,கசகசா மூன்றையும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அரைத்து வைத்துள்ள இரண்டு விழுதுகளையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்க்கவும்.
பின்னர் கரம் மசாலா,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கொத்தமல்லித்தழையை தூவவும்

 வெஜ் பீஸ் மசாலா சப்பாத்தி பூரிக்கு ஏற்ற side dish..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா... எளிதான செய்முறை குறிப்பிற்கு நன்றி...

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...