தேவையானவை:
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 3
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
தேங்காயெண்ணெய் 1/4 கப்
தேங்காய் பால் 2 கப்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவையானது
--------
செய்முறை:
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது தேங்காயெண்ணெயில் வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கக்கூடாது.சிறிது வதக்கினால் போதும்.
அதனுடன் இஞ்சிபூண்டு விழுது,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.மேலும் தேங்காயெண்ணய் சேர்த்து வதக்கவும்.உருளைக்கிழங்கு வெந்ததும்
தேவையான உப்பும் சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
இந்த உருளைக்கிழங்கு STEW தண்ணியாக இருக்கவேண்டும்.
இட்லி தோசைக்கு ஏற்ற sidedish.
2 comments:
அருமையான உருளைக்கிழங்குSTEW.
ஓட்டலில் ஆப்பத்திற்கு கொடுப்பார்கள்.அவர்கள் பீன்ஸ் சேர்த்துக் கொள்வார்கள்.
வருகைக்கு நன்றி
கோமதி அரசு
Post a Comment