தேவையானது:
இட்லி ரவா 4 கப்
கறுப்பு உளுத்தம்பருப்பு 2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
கறுப்பு உளுத்தம்பருப்பை 24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
வெந்தயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.
------
உளுந்து ஊறியதும் உளுந்து,வெந்தயம் இரண்டையும் சேர்த்து கிரைண்டரில் 45 நிமிடம் அரைக்கவேண்டும்.
இட்லி ரவாவை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் விட்டு இட்லிக்கு தேவையான உப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக பிசற வேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும்.(உளுந்தை அரைக்க ஆரம்பிக்கும் போது இட்லி ரவாவை ஊறவைத்தால் போதும்)
உளுந்தை அரைத்தவுடன் பிசறிய இட்லி ரவாவில் இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.(கலந்த மாவை மீண்டும் கிரைண்டரில் அரைக்கக்கூடாது)
இந்த மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவேண்டும்.
இந்த இட்லி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
2 comments:
Romba healthy idli...
Thanks Vijayalakshmi Dharmaraj
Post a Comment