Tuesday, March 24, 2015

வடு மாங்காய்

தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

(மீள் பதிவு )







8 comments:

ADHI VENKAT said...

மாவடு நன்றாக ஊறி பார்க்கவே ஜோரா இருக்கு.

குண்டு வடு இல்லாமல் கிளிமூக்கு வடுவில் போட்டாலும் நன்றாக இருக்குமா??

”தளிர் சுரேஷ்” said...

நீர் ஊற வைக்கும் ரெசிபி! அருமை! நன்றி!

Kanchana Radhakrishnan said...

@ Adhi Venkat

கிளி மூக்கு வடுவில் போட்டால் இந்த சுவை வராது.வருகைக்கு நன்றி Adhi.

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்...! சூப்பர்...!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ ‘தளிர்’ சுரேஷ்

Thanks ‘தளிர்’ சுரேஷ்

சாரதா சமையல் said...

மாவடு பார்க்கவே சூப்பரா இருக்கு.எனது பதிவு பூசணிக்காய் சாம்பார் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Saratha.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...