Sunday, July 26, 2015

" ஜில் ஜில் சீரகம்"




தேவையானவை:

சீரகம் 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
வெல்லம் பொடித்தது 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
----------

செய்முறை:

சீரகத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறிய பின் வடிகட்டி நைசாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
வெல்லத்தை பொடி செய்து ஒருகப் தண்ணீரில் கரைக்கவும்.வடிகட்டவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த சீரக விழுது வடிகட்டிய வெல்லக்கரைசல்,தேங்காய் பால்,ஏலத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
Fridge ல் ஒரு மணி நேரம் வைத்து குடிக்கலாம்.

'ஜில் ஜில் சீரகம்' கோடையில் உடலை குளிர்விக்கும்.
இரவில் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பருங்க...!

Kanchana Radhakrishnan said...


.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kanchana Radhakrishnan said...


.வருகைக்கு நன்றி -ரூபன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...