தேவையானவை:
சாமை அரிசி 1 கப்
சீரகசம்பா அரிசி 3/4 கப
பயற்றம்பருப்பு 1/2 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 8 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது
செய்முறை:
சாமை அரிசி,சீரகசம்பா அரிசி பயற்றம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்
மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைத்து.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்
குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்க்கவும்.அதனுடன்
மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.
பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.
கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
சுவையான சாமைஅரிசிப் பொங்கல் ரெடி.
No comments:
Post a Comment