தேவையானவை:
குடமிளகாய் 4
உருளைக்கிழங்கு 4
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
கார்ன் மாவு 1/4 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பில சிறிதளவு
------
செய்முறை:
குடமிளகாயை மேலே வெட்டி கிண்ணம் போல் செய்துகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பு,மஞ்சள்தூள்,காரப்பொடி சேர்த்து நன்கு முறுகலாக சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
ஒவ்வொரு குடமிளகாய் கிண்ணத்தின் உள்ளே சிறிதளவு எண்ணெய் தடவி உருளை பொரியலை வைத்து கார்ன் மாவு பேஸ்டால் நன்றாக மூடவும்.
(கார்ன் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவேண்டும்)
ovenஐ 275* யில் preheat செய்ய வேண்டும்.
ரெடியாக உள்ள stuffed குடமிளகாய்களை ஒரு ட்ரேயில் வரிசையாக வைக்கவேண்டும்.
cooking time 15 நிமிடம் 350* யில் வைத்து எடுக்கவேண்டும்.
சுவையானது.குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்,
2 comments:
மிக அருமையான குறிப்பு!
வருகைக்கு நன்றி மனோ.
Post a Comment