Tuesday, September 13, 2016

ஜவ்வரிசி இட்லி

தேவையானவை:

இட்லி ரவா 2 கப்
ஜவ்வரிசி 1 கப்
தயிர் 2 கப்
தண்ணீர் 2 கப்
துருவிய  தேங்காய் 1/2 கப்
ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய்  தேவையானவை
-------
தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
---------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  இட்லி ரவா,ஜவ்வரிசி இரண்டையும் கலந்து அதில் தயிர் போதுமான அளவு தண்ணீரும்  உப்பும் சேர்த்து  நன்றாக கலக்கவும்.8 மணி  நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு புளித்த பின் அதில் ஆப்பசோடா,தேங்காய் துருவல்,கொத்தமல்லித்தழை சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

கலந்த மாவை இட்லி தட்டில்  15 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவும்.

30. புடலங்காய் பொரிச்சக் கூட்டு.

 தேவையானவை: புடலங்காய் 1 பயத்தம்பருப்பு 1/2 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது கொத்தமல்லித்தழை சிறிதளவு ————- அரைக்க: மிளகாய...