Sunday, September 14, 2008

பருப்புத் துவையல்

முதல் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு 1 கப்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணைய் 1 டீஸ்பூன்

செய்முறை:
துவரம்பருப்பையும் மிளகையும் வாசனை வரும்வரைஎண்ணையில் வறுத்து உப்பு வைத்து
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவேண்டும்.
நன்றாக பருப்பு மசிந்து மையாக ஆகும்வரை அரைக்கவேண்டும்.

இரண்டாம் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு கால் கப்
கடலைபருப்பு கால் கப்
தேங்காய்த்துருவல் 2 tblsp
வற்றல் மிளகாய் 6
உப்பு தேவையானது

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய்வற்றல் மூன்றையும் கொஞ்சம் எண்ணையில்
வறுத்துக்கொண்டு உப்பு தேங்காய் துருவல் வைத்து
அரைக்கவேண்டும்.

சனிக்கிழமை..சீரகம்-மிளகு ரசமும்..பருப்புத்துவையலையும் சாப்பிட்டால்..ஞாயிறு அன்று ஸ்பெஷல் சாப்பாட்டிற்கு
வயிறு தயாராகிவிடும்.

3 comments:

கோவி.கண்ணன் said...

காஞ்சனா அம்மா,

அடுத்த முறை துவையல் செய்யும் போது சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுப்பதில் சேர்த்துக் கொள்ளுங்கள். துவையல் வாசனை தூக்கலாக இருக்கும், சுவையும் மாறுபட்டு இருக்கும். இராதா கிருஷ்ணன் ஐயா அதன் பிறகு கூட்டு பொறியல் கூட செய்யச் சொல்லி தொந்தரவு செய்யமாட்டார்.

:)

Kanchana Radhakrishnan said...

உங்களுக்கு சமையலைப்பற்றிக்கூட தெரியுமா?
விட்டால் அதற்கென ஒரு பதிவு போட்டுவிடுவீர்கள் போலிருக்கிறதே....:-))))
வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

//உங்களுக்கு சமையலைப்பற்றிக்கூட தெரியுமா?
விட்டால் அதற்கென ஒரு பதிவு போட்டுவிடுவீர்கள் போலிருக்கிறதே....:-))))
வருகைக்கு நன்றி//

ஆமாம் அம்மா,
சென்னையில் 10 ஆண்டுகள் பேச்சிலராகத்தான் பொழுது ஓடியது. அதற்கு முன்பே தெரியும், சென்னையில் சமைத்து தான் உண்டோம். சைவ சமையல் நன்றாக தெரியும். இப்போதும் வீட்டில் சனி அல்லது ஞாயிறு என் சமையல் தான்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...