Sunday, February 13, 2011

வெஜ் கைமா கறி

தேவையானவை:
வெங்காயம் 2
தக்காளி 3
சோயா பீன்ஸ் 1 கப்
காரட் 2
பட்டாணி 1 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானவை
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--------
அரைக்க:
இஞ்சி 1 துண்டு
பூண்டு 2 பல்
சோம்பு 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
முந்திரிபருப்பு 5
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
--------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காய்த்தூள் 1 டீஸ்பூன்
-----
செய்முறை:

வெங்காயம்,தக்காளி,காரட் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்
சேர்த்து எண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.
தக்காளியை எண்ணையில் வதக்கி பேஸ்டு மாதிரி செய்துகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
--------
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் சோயா பீன்ஸ்,காரட்,பட்டாணி,குறுக்கே நறுக்கிய பச்சைமிளகாய் எல்லாவற்றையும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
எல்லா காய்கறிகளும் நன்றாக வதங்கியவுடன் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் தக்காளி பேஸ்டு,அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியில் வறுத்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்.

10 comments:

Asiya Omar said...

அருமை.காஞ்சனா.

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது.சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி asiya omar.

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி ஸாதிகா.

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கு கஞ்சனா...சூப்பர்ப்...

Menaga Sathia said...

சப்பாத்திக்கேத்த சூப்பர்ர் சைட் டிஷ்!!

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி Geetha.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

மதுரை சரவணன் said...

arumai.. pakirukku nanri. vaalththukkal

Kanchana Radhakrishnan said...

Thanks for coming மதுரை சரவணன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...