தேவையானவை:
முருங்கைக்காய் 3
பயத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 2
பூண்டு 2 பல்
இஞ்சி 1 துண்டு
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பால் 1/2 கப்
சர்க்கரை 1 டீஸ்பூன்
செய்முறை:
முருங்கைக்காயை வேகவைத்து உள்ளிருக்கும் விதைகளை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
இதனுடன் பயத்தம்பருப்பு,இஞ்சி,பூண்டு சேர்த்து குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வேகவைக்கவேண்டும்.
மிளகு,சீரகம் இரண்டையும் வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவேண்டும்.
முருங்கைக்காய் விதைகள்,குக்கரில் வைத்த பயத்தம்பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் மிக்சியில்
அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தேவையான உப்பும்,சிறிது சர்க்கரையையும் சேர்க்கவேண்டும்.
சூப்பை அருந்துவதற்கு முன்பு மிளகு சீரகப் பொடி சேர்க்கவேண்டும்.
8 comments:
வித்தியாசமான சூப்பர்ர் சூப்!!
super
முருங்கைக்காயில் சூப்பா...பருப்பும் சேர்வதால் ஆரோக்யமாவும் இருக்கும் !
வருகைக்கு நன்றி Menaga.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
// ஹேமா said...
முருங்கைக்காயில் சூப்பா...பருப்பும் சேர்வதால் ஆரோக்யமாவும் இருக்கும்///
ஆமாம்.வருகைக்கு நன்றி ஹேமா.
Tempting n differnt soup
Thanks for coming Geetha.
Post a Comment