Wednesday, March 9, 2011

தாளிச்ச சாதம்


தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

நல்லெண்ணைய் 2 டேபிள்சபூன்

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

புளி சிறிதளவு

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 4

கறிவேப்பிலை 1 கொத்து

கடுகு 1 டீஸ்பூன்
உப்பு    தேவையானது

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பாதாம் பருப்பு 5

செய்முறை:

பாசுமதி அரிசியை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து அப்படியே ele.cooker ல் வைக்கவும்.

----------

தேவையானவற்றில் குறிப்பிட்டுள்ளவைகளை ரெடியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு முதலில்

கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு தாளிக்கவேண்டும்.

அடுத்து புளியை நாரில்லாமல் எடுத்து எண்ணையில் போட்டு பொறிக்கவேண்டும்.

அதன்பின் மஞ்சள்தூள்,மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.

பின்னர் கடுகை போட்டு வெடிக்க விடவேண்டும்.உப்பு சேர்க்கவேண்டும்..


கடுகு வெடித்தவுடன் முந்திரிபருப்பு துண்டுகள்,பொடித்த பாதாம்பருப்பு சேர்க்கவேண்டும்..

கடைசியாக உதிரியாக வடித்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

----

இந்த தாளிச்ச சாதத்துக்கு அறுசுவையும் உண்டு.

பொறித்த அப்பளத்துடன் சாப்பிடலாம்.

11 comments:

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்ரது...

Jaleela Kamal said...

மிக அருமை

Kanchana Radhakrishnan said...

Thanks Geetha.

Kanchana Radhakrishnan said...

Thanks Jaleela.

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு...

ஹேமா said...

இந்தச் சாதத்தில் வாசனைதான் முதலிடமோ !

ராமலக்ஷ்மி said...

நேற்று பார்த்தேன். இன்று செய்தாயிற்று:)! அருமையான குறிப்புக்கு நன்றி மேடம்.

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
இந்தச் சாதத்தில் வாசனைதான் முதலிடமோ ////

வாசனையும் முதலிடம் ருசியும் முதலிடம்.வருகைக்கு நன்றி ஹேமா.

Asiya Omar said...

அருமையாக இருக்கு,எனக்கு எப்பவும் வெரைட்டியாக ரைஸ் செய்து சாப்பிட பிடிக்கும்.

Kanchana Radhakrishnan said...

ராமலக்ஷ்மி said...
நேற்று பார்த்தேன். இன்று செய்தாயிற்று:)! அருமையான குறிப்புக்கு நன்றி மேடம்.//

பின்னோட்டம் பார்த்தவுடன் நன்றி தெரிவித்துவிட்டேன்:))

Kanchana Radhakrishnan said...

// asiya omar said...
அருமையாக இருக்கு,எனக்கு எப்பவும் வெரைட்டியாக ரைஸ் செய்து சாப்பிட பிடிக்கும்.//

இந்த தாளிச்ச சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவையும் அதிகம்.
வருகைக்கு நன்றி asiya omar.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...