Sunday, March 13, 2011

ஓட்ஸ் இட்லி


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
ரவை 1 கப்
தயிர் 1 1/2 கப்
காரட் 2
உருளைக்கிழங்கு 1
பீன்ஸ் 10
பட்டாணி 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஓட்ஸையும் ரவையயும் தனித்தனியாக எண்ணையில்லாமல் வறுக்கவும்.

பின்னர் தனித்தனியாக தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கிகொண்டு பட்டாணியுடன் microwave ல் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும்.

முந்திரிபருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2 கப் தயிர் விட்டு
அதனுடன் தண்ணீரில் ஊறவைத்த ஓட்ஸையும் ரவையையும் சிறிது உப்புடன் சேர்த்து மீண்டும் 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
15 நிமிடம் கழித்து தயிரில் துருவிய காரட்.உருளைக்கிழங்கு,இஞ்சி,வேகவைத்த பட்டாணி,பீன்ஸ்,வறுத்த முந்திரி எல்லாவற்றையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இட்லி தட்டில் எண்ணைய் தடவி ஓட்ஸ் இட்லி மாவை ஊற்றி ஆவியில் 12 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
இதற்கு side dish வெங்காய காரச்சட்னி . 

4 comments:

Priya Sreeram said...

kanchana this looks good n very healthy !

ஹேமா said...

உண்மையா எனக்கு இட்லி அவிக்கத் தெரியாது.இந்த இட்லியாவது செய்து பாத்திட்டுச் சொல்றேன் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Priya.

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
உண்மையா எனக்கு இட்லி அவிக்கத் தெரியாது.இந்த இட்லியாவது செய்து பாத்திட்டுச் சொல்றேன் !//

செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி ஹேமா .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...