தேவையானவை:
தயிர் 2 கப்
நெல்லிக்காய் 2
மாங்காய் துண்டு 2
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
புதினா சிறிதளவு
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
தயிரை நன்கு கடைந்துகொள்ளவும்.
நெல்லிக்காயை ஒரு microwave cupல் சிறிது தண்ணீருடன் 2 நிமிடம் வைத்தால் சிறிது வெந்திருக்கும்.
உள்ளே இருக்கும் கொட்டையை சுலபமாக எடுத்துவிடலாம்.
மாங்காய் துண்டுகளின் தோலை சீவிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழை,புதினா இரண்டையும் நன்கு ஆய்ந்து கொள்ளவும்.
இஞ்சியின் தோலை சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--------
நெல்லிக்காய்,மாங்காய் துண்டுகள்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புதினா,இஞ்சி,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் ஒரு கப் தயிரில் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
பின்னர் மீதமுள்ள ஒரு கப் தயிரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
மசாலா லஸ்ஸி வெய்யிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
7 comments:
very nice refreshing drink .... apt for this summer..
Reva
வருகைக்கு நன்றி Revathi.
வாய் புளிக்குது.அநேகமாக நல்ல வெயில் காலத்துக்குச் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்குமென்று நினைக்கிறேன்.நன்றி !
aha..super refreshing drink!!
வாவ்..ரொம்ப ஹெல்தியான லஸ்ஸி...
வருகைக்கு நன்றி Menaga.
வருகைக்கு நன்றி Geetha.
Post a Comment