Monday, October 17, 2011

பொன்னாங்கண்ணிக்கீரை மசியல்




தேவையானவை:
பொன்னாங்கண்ணிக்கீரை அரிந்தது 2 கப்
துவரம்பருப்பு அல்லது
பயத்தம்பருப்பு 1/2 கப்
காராமணி பருப்பு 1 மேசைக்கரண்டி
முழுப்பயறு1 மேசைக்கரண்டி
flax seeds                            1 தேக்கரண்டி
--------
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
தனியா பவுடர் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
வறுத்த தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
--------
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
--------
செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிந்தபொன்னாங்க்கண்ணிக்கீரை,பயத்தம்பருப்பு,காராமணி பருப்பு,flax seeds எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீருடன் (1/2 கப்)
சேர்த்து அப்படியே குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கீரைக்கலவையை நன்றாக மத்தில் மசித்து சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,தனியா பவுடர்,சீரகத்தூள்,மிளகுத்தூள்,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவும்.
மசியல் தண்ணியாக இருந்தால் ஒரு தேக்கரண்டி கடலை மாவு அல்லது கார்ன் மாவு தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கலாம்.
இந்தக்கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது.உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

6 comments:

ஹேமா said...

நிச்சயம் குழந்தைகளுக்குப் பிடித்ததும் நிறைந்த சத்துள்ளதாயுமிருக்கும் !

MyKitchen Flavors-BonAppetit!. said...

Ponnankanni keerai recipe luks yumm and healthi.Luv it.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா. விடுமுறை ஆனந்தமாகக்கழிந்து இயந்திர வாழ்க்கைக்கு திரும்பியாயிற்றா!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி MyKitchen Flavors-BonAppetite.

Menaga Sathia said...

Healthy & super masiyal!!

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...