Tuesday, March 20, 2012

ரவா பக்கோடா




தேவையானவை:

ரவா 2 கப்
கடலை மாவு 1/2 கப்
அரிசிமாவு 1/4 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரப்பொடி 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
ரவையை லேசாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை,கடலைமாவு,அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,
காரப்பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மிதமான் தீயில் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

12 comments:

ஸாதிகா said...

ரவாவில் பகோடா.புதிய முயற்சி.

Radha rani said...

புதுமையாக இருக்கு..எளிய குறிப்பாகவும் இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

ரவாவில் பக்கோடா.நிச்சயம் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும் !

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
ரவாவில் பகோடா.புதிய முயற்சி.//


ரவாவில் பக்கோடா செய்வது வழக்கம்.வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

//ராதா ராணி said...
புதுமையாக இருக்கு..எளிய குறிப்பாகவும் இருக்கு.பகிர்வுக்கு நன்றி.//

செய்வதும் எளிது.வருகைக்கு நன்றி ராதா ராணி.

Kanchana Radhakrishnan said...

//
ஹேமா said...
ரவாவில் பக்கோடா.நிச்சயம் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும் !//

நிச்சயம் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும் Hema.

ADHI VENKAT said...

ரவையில் பக்கோடா புதுமையாக இருக்குங்க.நிச்சயம் செய்து பார்ப்பேன்.

Jaleela Kamal said...

பகோடா மொரு மொருன்னு வர கொஞ்சம் ரவை சேர்ப்போம் நீங்க ரவையிலேயே பகோடா செய்துட்டீஙக்ளா சூப்பர் தான் மீரா

Menaga Sathia said...

வித்தியாசமான பகோடா!!

Kanchana Radhakrishnan said...

//கோவை2தில்லி said...
ரவையில் பக்கோடா புதுமையாக இருக்குங்க.நிச்சயம் செய்து பார்ப்பேன்.//

நிச்சயம் செய்து பாருங்கள்.

Kanchana Radhakrishnan said...

// Jaleela Kamal said...
பகோடா மொரு மொருன்னு வர கொஞ்சம் ரவை சேர்ப்போம் நீங்க ரவையிலேயே பகோடா செய்துட்டீஙக்ளா சூப்பர் தான் மீரா.//


நிச்சயம் பக்கோடா மொறு மொறுப்பாக இருக்கும் Jaleela.

Kanchana Radhakrishnan said...

//
S.Menaga said...
வித்தியாசமான பகோடா!!//


வருகைக்கு நன்றி Menaga.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...