Friday, July 6, 2012

ரைஸ் பக்கோடா



தேவையானவை:
சாதம் 1 கப்
கடலைமாவு 1/2 கப்
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

வெங்காயம்,இஞ்சி,பச்சை,மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடித்த சாதம்,கடலைமாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

16 comments:

Radha rani said...

சாதம் மீதமானால் இதுமாதிரி பக்கோடா செஞ்சுடலாம் போல.நல்ல ஐடியா..நல்லா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராதா ராணி.

ராமலக்ஷ்மி said...

விரைவில் செய்யக்கூடிய சுவையான குறிப்பு. அருமை. நன்றி.

கோமதி அரசு said...

நல்ல குறிப்பு.
செய்து பார்க்கிறேன்.

virunthu unna vaanga said...

nice idea to use leftover rice...

VIRUNTHU UNNA VAANGA

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
விரைவில் செய்யக்கூடிய சுவையான குறிப்பு. அருமை. நன்றி.//


வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

//கோமதி அரசு said...
நல்ல குறிப்பு.
செய்து பார்க்கிறேன்.//


செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

ரைஸில் பக்கோடாவா?அசத்துங்க.

Kanchana Radhakrishnan said...

// Vijayalakshmi Dharmaraj said...
nice idea to use leftover rice...//

வருகைக்கு நன்றி Vijayalakshmi Dharmaraj.

கீதமஞ்சரி said...

அவசரத்துக்கு ஏற்ற சுவையான சூடான மாலை நேரச் சிற்றுண்டி. பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.

நம்பள்கி said...

பள்ளிக் கூட நாட்களில் விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது மாலை நேரங்களில் (மந்தைவெளி, மைலாப்பூரில்) பக்கோடா வாசனை வரும்; அந்த பக்கோடா சுவையே தனி; அதில் உள்ள வெங்காயம் காய்ந்து போனதாக இருந்தாலும்!

அந்த மாதிரி பக்கோடா எப்படி செய்வது? அதைப் பற்றி எழுதிஇருந்தால், சுட்டி காட்டவும்!

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
ரைஸில் பக்கோடாவா?அசத்துங்க.//

வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

// கீதமஞ்சரி said...
அவசரத்துக்கு ஏற்ற சுவையான சூடான மாலை நேரச் சிற்றுண்டி. பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.//


வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.

VijiParthiban said...

ஆஹா ரைஸ் பக்கோடாவா அருமை... நானும் செய்து பார்க்கிறேன்....

Kanchana Radhakrishnan said...

// நம்பள்கி said...
பள்ளிக் கூட நாட்களில் விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது மாலை நேரங்களில் (மந்தைவெளி, மைலாப்பூரில்) பக்கோடா வாசனை வரும்; அந்த பக்கோடா சுவையே தனி; அதில் உள்ள வெங்காயம் காய்ந்து போனதாக இருந்தாலும்!

அந்த மாதிரி பக்கோடா எப்படி செய்வது? அதைப் பற்றி எழுதிஇருந்தால், சுட்டி காட்டவும்!//

இங்கே சென்று பார்க்கவும்

http://www.annaimira.blogspot.com/2012/07/blog-post_09.html
வருகைக்கு நன்றி நம்பள்கி.

Kanchana Radhakrishnan said...

// VijiParthiban said...
ஆஹா ரைஸ் பக்கோடாவா அருமை... நானும் செய்து பார்க்கிறேன்....//

வருகைக்கு நன்றி VijiParthiban .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...