தேவையானவை:
ராகி மாவு 1 கப்
வறுத்த வேர்க்கடலை 3/4 கப்
எள் 1/2 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு சிறிது உப்பு,வெது வெதுப்பான தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு பிசறி
குக்கரில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.ஆறினவுடன் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
எள்ளை வறுக்கவும்.
வறுத்த வேர்கடலை,வறுத்த எள்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் பொடி நான்கையும் மிக்சியில் பொடி செய்யவும்.
பொடித்த மாவை ஆவியில் வேகவைத்த ராகி மாவுடன் கலந்து எடுத்து வைக்கவும்.
ராகி சத்து மாவில் சிறிதளவு நெய் சேர்த்து உருண்டைகளாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சத்து மிகுந்தது இது.
10 comments:
சத்தான குறிப்பு. நன்றி.
அருமையான சத்தான உணவு...சூப்பர்...
ராகி மாவை வேக வைத்து செய்தது இல்லை, நான் ராகியை வறுத்து பொடி செய்து இருக்கிறேன். புதுமையாக இருக்கிறது இந்த சத்து மாவு உருண்டை. உடனே காலி செய்து விட வேண்டுமா? வைத்து சாப்பிடலாமா? குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.
நன்றி.
//ராமலக்ஷ்மி said...
சத்தான குறிப்பு. நன்றி.//
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
//VijiParthiban said...
அருமையான சத்தான உணவு...சூப்பர்...//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
VijiParthiban
இரும்புச்சத்து நிறைந்த சத்தான ராகிமாவு குறிப்பு.. பாராட்டுக்கள்..
//கோமதி அரசு said...
ராகி மாவை வேக வைத்து செய்தது இல்லை, நான் ராகியை வறுத்து பொடி செய்து இருக்கிறேன். புதுமையாக இருக்கிறது இந்த சத்து மாவு உருண்டை. உடனே காலி செய்து விட வேண்டுமா? வைத்து சாப்பிடலாமா? குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.
நன்றி.//
ஆவியிலிருந்து எடுத்த ராகி மாவை உதிர்க்கும்பொழுது ஈரமில்லாமல் இருக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு உருண்டையாக செய்யும்போது நெய்யை உருக்கி கலந்து உருண்டை செய்யவும்.தண்ணீர் தெளிக்கவேண்டாம்.
இப்படி செய்தால் ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
நல்ல குறிப்பு
இதை வீட்டில் இதுவரை செய்ததில்லை.
எளிதான செய்முறையாக இருக்கிறது.
சத்தான சமையல் குறிப்பு... நன்றி சகோ !
(த.ம. 3)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
//இராஜராஜேஸ்வரி said...
இரும்புச்சத்து நிறைந்த சத்தான ராகிமாவு குறிப்பு.. பாராட்டுக்கள்..//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
இராஜராஜேஸ்வரி.
Post a Comment