தேவையானவை:
கறுப்பு எள் 1கப்
மிளகாய் வற்றல் 5
உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
எள்ளை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து வறுக்கவேண்டும்.
நன்றாக வெடிக்கும். வெடிப்பது நின்றவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு கடலைபருப்பு ,பெருங்காயத் துண்டு நான்கையும் எண்ணையில் வறுக்கவேண்டும்.
கறிவேப்பிலையையும் அதே வாணலியில் லேசாக பிரட்டவேண்டும்.
மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய் வற்றல்.உளுத்தம்பருப்பு,பெருங்காயத்துண்டு கடலைபருப்பு,கறிவேப்பிலை, பொடிசெய்துவிட்டு
அதனுடன் வறுத்த எள்ளு,தேவையான உப்பு சேர்த்து பொடி செய்யவேண்டும்.
இந்த எள்ளுபொடியை சாதத்துடன் சிறிது நல்லெண்ணய் சேர்த்து பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
17 comments:
ருசியான சத்தான பொடி!!! அருமை எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்தது!!!
எனக்கு மிகவும் பிடித்த ஐயிட்டம்
எங்கள் பாட்டி செய்வார்கள் சுவையாக இருக்கும்
மனைவி தெரியாது எனச் சொல்லிக் கொண்டிருந்தார்
தங்கள் ப்திவைப் படித்ததும் தைரியம் வந்துவிட்டது
அவசியம் செய்கிறேன் எனச்சொல்லியுள்ளார்
பதிவுக்கு மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மிகவும் ருசியான பொடி...
இட்லி பொடியுடன் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.
பகிர்வு நன்றி சகோ !
(த.ம. 3)
// Vijayalakshmi Dharmaraj said...
ருசியான சத்தான பொடி!!! அருமை எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்தது//
வருகைக்கு நன்றி Vijayalakshmi Dharmaraj.
// Ramani said...
எனக்கு மிகவும் பிடித்த ஐயிட்டம்
எங்கள் பாட்டி செய்வார்கள் சுவையாக இருக்கும்
மனைவி தெரியாது எனச் சொல்லிக் கொண்டிருந்தார்
தங்கள் ப்திவைப் படித்ததும் தைரியம் வந்துவிட்டது
அவசியம் செய்கிறேன் எனச்சொல்லியுள்ளார்
பதிவுக்கு மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
உங்கள் மனைவியை செய்யச்சொல்லுங்கள்.செய்வது மிகவும் சுலபம்.வருகைக்கு நன்றி Ramani.
எள்ளுப்பொடி நல்லாயிருக்கு..இதனுடன் சிறிது பூண்டை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
அருமையான சத்தான பொடி.... நான் சாப்பிட்டதில்லை அக்கா... நானும் செய்துபார்க்கிறேன்...
நீங்கள் சொன்ன குறிப்பில் கொட்டை எடுத்த புளியும் சேர்த்து இடித்து சாப்பிடுங்கள் மிக அருமையாக இருக்கும் நீண்ட காலம் இருக்கும். நான் இந்தியா வரும் போது எனது தாயார் எள்ளு பொடி செய்து தருவார் அவரது மறைவிற்கு பிறகு அந்த பொடியும் ம்றைந்து விட்டது அதன் பின் உங்கள் தளத்தில்தான் இப்போது நான் பார்க்கிறேன்
அருமையான பொடி
//
திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் ருசியான பொடி...
இட்லி பொடியுடன் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.
பகிர்வு நன்றி சகோ !//
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
// ராதா ராணி said...
எள்ளுப்பொடி நல்லாயிருக்கு..இதனுடன் சிறிது பூண்டை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.//
வருகைக்கு நன்றி ராதா ராணி.
// VijiParthiban said...
அருமையான சத்தான பொடி.... நான் சாப்பிட்டதில்லை அக்கா... நானும் செய்துபார்க்கிறேன்//
வருகைக்கு நன்றி VijiParthiban.
// Avargal Unmaigal said...
நீங்கள் சொன்ன குறிப்பில் கொட்டை எடுத்த புளியும் சேர்த்து இடித்து சாப்பிடுங்கள் மிக அருமையாக இருக்கும் நீண்ட காலம் இருக்கும். நான் இந்தியா வரும் போது எனது தாயார் எள்ளு பொடி செய்து தருவார் அவரது மறைவிற்கு பிறகு அந்த பொடியும் ம்றைந்து விட்டது அதன் பின் உங்கள் தளத்தில்தான் இப்போது நான் பார்க்கிறேன்//
இது வரை புளி சேர்த்ததில்லை.சேர்த்து பார்க்கிறேன்.
வருகைக்கு நன்றி Avargal Unmaigal.
// ஸாதிகா said...
அருமையான பொடி//
வருகைக்கு நன்றி ஸாதிகா.
thanks for the recipe.
எள்ளை தண்ணீரில் ஊறவைப்பதனால் என்ன பயன்?
எள்ளில் கசப்புத்தன்மை இருக்கும்.தண்ணீரில் ஊறவைத்து வறுத்தால் சிறிது குறையும்.
வருகைக்கு நன்றி அப்பாதுரை.
ட்ரை பண்றேன்.
Post a Comment