தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
வறுத்த வேர்கடலை 1 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
ஆப்பசோடா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
பொட்டுக்கடலை,பச்சைமிளகாய்,இஞ்சி,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.தனியே எடுத்து வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பொட்டுக்கடலை பொடி,வேர்க்கடலை பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து
வடை மாவு பதத்திற்கு பிசையவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் கலந்து வடைகளாக தட்டலாம்.
சுவையான "CRISP" வடை ரெடி.
13 comments:
அருமையான குறிப்பு. விரைவில் தயார் செய்யவும் உகந்தது. செய்து பார்க்கிறேன். நன்றி.
நல்லா இருக்கு.
நல்ல செய்முறை தந்தமைக்கு நன்றி சகோதரி.
என் பொண்ணுக்கு வடை என்றால் ரொம்ப பிடிக்கும். (த.ம. 1)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
இஃப்தாருக்கு ஒரு புதிய ரெஸிப்பி.
ரொம்ப சுலபமான வடை செய்முறை விளக்கமும் வடையின் படமும் அருமை அக்கா... நானு செய்து பார்க்கிறேன்...
//ராமலக்ஷ்மி said...
அருமையான குறிப்பு. விரைவில் தயார் செய்யவும் உகந்தது. செய்து பார்க்கிறேன். நன்றி.//
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.
// ராதா ராணி said...
நல்லா இருக்கு.//
Thanks ராதா ராணி.
// திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல செய்முறை தந்தமைக்கு நன்றி சகோதரி.
என் பொண்ணுக்கு வடை என்றால் ரொம்ப பிடிக்கும். (த.ம. 1)//
நன்றி திண்டுக்கல் தனபாலன் .
மிக அருமை
// ஸாதிகா said...
இஃப்தாருக்கு ஒரு புதிய ரெஸிப்பி.//
வருகைக்கு நன்றி ஸாதிகா
// VijiParthiban said...
ரொம்ப சுலபமான வடை செய்முறை விளக்கமும் வடையின் படமும் அருமை அக்கா... நானு செய்து பார்க்கிறேன்//
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
VijiParthiban.
// Jaleela Kamal said...
மிக அருமை//
வருகைக்கு நன்றி Jaleela.
செய்து பார்த்தேன் வடை நொருங்கி ரவை போன்று ஆனது.
Post a Comment