தேவையானவை:
வெந்தயம்1/2 கப்
பூண்டு10 பல்
வெங்காயம்2
பச்சைமிளகாய்2
தக்காளி2
புளிஎலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம்2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
உளுத்தம்பருப்பு1/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்3
தேங்காய் துருவல்1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
------
ஊறவைத்து வேகவைத்த வெந்தயம்
செய்முறை:
குருமா
வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்துள்ள வெந்தயம்,அரைத்த விழுது,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.
வெந்தய குருமாவை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.
வெந்தய குருமா நீரிழிவுகாரர்களுக்கு சிறந்தது.
6 comments:
வெந்தயத்தில் குருமாவா?நல்ல சத்தானதும் கூட.
செய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி அம்மா...
அட, புதுசா இருக்கே!
@ ஸாதிகா.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
@ திண்டுக்கல் தனபாலன்
Thanks திண்டுக்கல் தனபாலன்.
வித்தியாசமான குருமா !
Post a Comment