Monday, November 11, 2013

FLAX SEED உருண்டை



தேவையானவை:                               Flax Seed

Flax seed 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1/4 கப்
-------


செய்முறை:

Flax seed ஐ வெறும் வாணலியில் வறுத்து (வறுக்கும் போது எள் மாதிரி வெடிக்கும்) பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொட்டுக்கடலையையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொடி செய்த Flax seed,பொட்டுக்கடலை,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும். நெய்யை உருக்கி பொடித்த மாவுடன் கலந்து உருண்டைகளாக பிடிக்கலாம்.

நெய் சேர்க்காமல் தண்ணீர் தெளித்தும் உருண்டைகளாக பிடிக்கலாம்.
Flax seed சாப்பிட்டால் கொலாஸ்ட்ரல் அளவு குறையும்.

5 comments:

ராஜி said...

கொள்ளுதானே!?

அமுதா கிருஷ்ணா said...

Flax seed பொடி செய்து சப்பாத்தி மாவுடன் கலந்து வைத்து விடுவேன். இது நல்ல ஐடியா செய்ய வேண்டும்


ராஜி இது கொள்ளு இல்லைப்பா..

Kanchana Radhakrishnan said...

// ராஜி
கொள்ளுதானே///


கொள்ளு இல்லை.ஆளி விதை.வருகைக்கு நன்றி ராஜி.

Kanchana Radhakrishnan said...


@ ராமலக்ஷ்மி.

வருகைக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...


@ அமுதா கிருஷ்ணா

வருகைக்கு நன்றி
அமுதா கிருஷ்ணா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...