Sunday, December 15, 2013

திருவாதிரைக் களியும் ஏழு காய் கூட்டும்



திருவாதிரைக் களி:

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
துருவிய தேங்காய் 3/4 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
------
செய்முறை:
அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவேண்டும்.
வறுத்த அரிசியை மிக்சியில் ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய்,உடைத்த முந்திரி இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டிவைக்கவும்.
------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உடைத்த அரிசி ரவை,வடிகட்டிய வெல்லம்,வறுத்த தேங்காய் துருவல் மூன்றையும்  வெல்லக்கரைசல் 2 கப் தண்ணீர் அரை கப்  சேர்த்து குக்கரில் வைக்கவும்.(3 விசில்).

குக்கரில் இருந்து எடுத்து மீதியுள்ள நெய்,வறுத்த முந்திரி,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு
  கிளறவேண்டும்.
------------------------------
ஏழு காய் கூட்டு:


தேவையானவை:

பூசனிக்காய் ஒரு துண்டு
பரங்கிக்காய் ஒரு துண்டு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல்  1கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி

பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

11 comments:

கோமதி அரசு said...

வெல்லத்தண்ணீர் சேர்த்து இரண்டரை கப் த்ண்ணீரா? வெல்லத்த்ண்ணீரும், அப்புறம் இரண்டரை கப் தண்ணீரா? கொஞ்சம் சொன்னால் நல்லது.
நாங்கள். பாசிப்பருப்பை வறுத்து கொஞ்சம் மொட்டாய் வேக வைத்து அரிசி ரவையுடன் சேர்த்து செய்வோம்.
ஏழுகாய் கூட்டு அருமை.

Kanchana Radhakrishnan said...

எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதை சரியாகக் கூறியுள்ளேன்.தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கோமதி அரசு.

இராஜராஜேஸ்வரி said...

திருவாதிரைக் களியும் ஏழு காய் கூட்டும்" சிறப்பு சமையல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

கோமதி அரசு said...

நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

@ இராஜராஜேஸ்வரி

நன்றி இராஜராஜேஸ்வரி.

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்புகள், நன்றி.

Kanchana Radhakrishnan said...


நன்றி ராமலக்ஷ்மி.

Anonymous said...

Nice Post Wish you all the best by http://wintvindia.com/

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கோமதி அரசு said...

காஞ்சனா, சுண்டைக்காய் வத்தல் குழம்பு இன்றைய வலைச்சரத்தில்.உங்கள் இன்னொரு வலைதளத்தை உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

Kanchana Radhakrishnan said...

எனது இன்னொரு வலைதளம் குழந்தைகளுக்கான சிறு கதைகள்.
இங்கே சென்று பார்க்கவும்.

www.siruvarulakam.blogspot.com

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...