பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 10
பச்சைமிளகாய் 4
பட்டை 1 துண்டு
பிரிஞ்சி இலை 1
லவங்கம் 5
கிராம்பு 5
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:
சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து பட்டை,பிரிஞ்சி இலை,லவங்கம்,கிராம்பு நான்கையும் வறுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,குறுக்கே நறுக்கிய பச்சைமிளகாய்
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் ஊறவைத்த அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து நன்றாக பிரட்டவேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர், தேங்காய் பால்,தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வைக்கவேண்டும். பிறகு
அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
சுவையான பிரிஞ்சி ரெடி.
எதிர்பாராமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த திடீர் பிரிஞ்சி நமக்கு கை கொடுக்கும்.
8 comments:
மிகவும் எளிதான செய்முறை என்று வீட்டில் சொன்னார்கள்... நன்றி...
வணக்கம்
சிறப்பான செய்முறை விளக்கம் குறிப்பு எடுத்தாச்சி.... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பிரிஞ்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ Rupan
Thanks Rupan
@
கோமதி அரசு
வருகைக்கு நன்றி
கோமதி அரசு.
ருசியாக இருக்கும் போல் தெரிகிறது....
பிரிஞ்சி இலை தான் தெரியும், பிரிஞ்சி சாதமா! காரத்துக்கு ப.மிளகாய் மட்டும் தானா?
செய்து பார்க்கிறேன்.
" பிரிஞ்சி " ரொம்ப காரமாக இருக்கக்கூடாது.Sidh dish குருமா செய்தால் இந்த காரத்தை ஈடுகட்டி விடும்.வருகைக்கு நன்றி Aadi.
Post a Comment