தேவையானவை:
பச்சை குடமிளகாய் 1
சிவப்பு குடமிளகாய் 1
மஞ்சள் குடமிளகாய் 1
வெங்காயம் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
பொட்டுக்கடலை 1 மேசைக்க்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு.
--------
செய்முறை:
மூன்று குட மிளகாய்களையும்,வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்துள்ள பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து பிரட்டவும்..
பின்னர் நறுக்கி வைத்துள்ள மூன்று குடமிளகாய்களையும் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் எல்லாம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பொட்டுக்கடலை பொடியை தூவி கிளற சுவையான குடமிளகாய்..வெங்காயம்...பொரியல் ரெடி.
பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
2 comments:
பெரிய மார்க்கெட் தான் போக வேண்டும் - குடமிளகாய் வாங்க...!
அப்போது செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...
பச்சை குடமிளகாய் மட்டும் (எளிதில் கிடைக்கும்) சேர்த்து செய்யலாம்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment