தேவையானவை:
குடமிளகாய் 1
தயிர் 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் 1/4 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
----
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு Microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சிறிது தண்ணீர் தெளித்து microwave ல் ஒரு நிமிடம் வைத்தால் குடமிளகாய் வெந்துவிடும்.
தேங்காய்,இஞ்சித்துண்டு,பச்சைமிளகாய் மூன்றையும் சிறிது தயிருடன் விழுது போல அரைத்து குடமிளகாயுடன் சேர்க்கவும்.
தேவையான உப்பும்,மீதமுள்ள தயிரையும் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நன்கு கலக்கவும்.
7 comments:
குடமிளகாய் பச்சடி நன்றாக இருக்கிறது.
நன்றி.
அருமை... செய்து பார்த்து விடுகிறோம்...
நன்றி...
@ கோமதி அரசு
நன்றி.கோமதி அரசு.
@ திண்டுக்கல் தனபாலன்
Thanks திண்டுக்கல் தனபாலன்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
குடமிளகாயிலும் பச்சடி செய்யலாமா? உடனே செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.
Thanks கீத மஞ்சரி.
Post a Comment