மாங்காய் பச்சடி:
தேவையானது:
மாங்காய் 1
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
உப்பு தேவையானது
செய்முறை:
மாங்காயை தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்சிறிது தண்ணீர் விட்டு மாங்காய் துண்டுகள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைந்து சேர்ந்த பின் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும் .அடுப்பை அணைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து கொட்டவும்.
வேப்பம் பூ பச்சடி
தேவையானவை:
வேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன்
புளி எலுமிச்சைஅளவு
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
அரிசி மாவு 1 டீஸ்பூன்
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 3
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வேப்பம் பூ சிறிது எண்ணைய் விட்டு நல்ல கறும் சிவப்பாக வறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கிள்ளிய மிளகாய்வற்றல்.பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்துவிடவும்.உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்தபின் அரிசிமாவை கரைத்துவிடவும்.
இறக்கும் பொழுது வறுத்த வேப்பம் பூவை போடவேண்டும்.
(இரண்டும் சேர்த்து ஒரே பச்சடியாக செய்வோரும் உண்டு
4 comments:
குறிப்புகளுக்கு நன்றி.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
அருமையான பகிர்வு. உங்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் காஞ்சனா.
வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்
Post a Comment