தேவையானவை:
-------- அவகோடா
கோதுமை மாவு 2 கப்
அவகோடா 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
அவகோடாவை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கோதுமை மாவு,மசித்த அவகோடா,உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,எண்ணெய் எல்லாவற்றையும் கலந்து பிசையவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.தேவையென்றால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்.பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து அடுப்பில் போட்டு எடுக்கவும்.
எண்ணெய் ஊற்ற தேவையில்லை.
அவகோடா சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
அவகோடா LDL (கெட்ட கொழுப்பு ) ஐ குறைத்து HDL (நல்ல கொழுப்பு ) ஐ அதிகரிக்கச் செய்யும்.
4 comments:
அமெரிக்கா போய் இருந்த போது அவகோடா சப்பாத்தி மருமகள் செய்து கொடுத்தாள்.
எங்கள் ஊரில் கிடைக்காது.
பகிர்வுக்கு நன்றி.
சுவையான குறிப்பு. இங்கே கிடைக்காதே...:)
@ கோமதி அரசு
நீல்கிரிஸ் போன்ற பெரிய சூப்பர் மார்க்கெட்டில் அவகோடா கிடைக்கிறது..வாருகைக்கு நன்றி கோமதி அரசு
@ ADHI VENKAT
வருகைக்கு நன்றி Adhi Venkat.
Post a Comment