Thursday, July 24, 2014

மெக்சிகன் ரைஸ்


தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
--------
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
--------
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
------
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான  உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல்
வைக்கலாம்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
எளிமையானமுறையில் சமையல்குறிப்பு பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் செய்து பார்க்கிறோம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

அருமையான மெக்சிகன் ரைஸ் செய்முறை அருமை.

Kanchana Radhakrishnan said...

@
திண்டுக்கல் தனபாலன்

Thanks
திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...

@ ரூபன்

வருகைக்கு நன்றி ரூபன்,

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதி அரசு.

ராமலக்ஷ்மி said...

எளிதான செய்முறை விளக்கம். அருமை. செய்து பார்க்கிறேன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...