தேவையானவை:
பீன்ஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
சோளம் (கார்ன்) 1 கப்
தேங்காய் பால் 2 கப்
-----------------------
அரைக்க:
தனியா 1 மேசைக்கரண்டி
மிளகு 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
பூண்டு 2 பல்
புதினா சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
முந்திரிபருப்பு 10
-------------------
தாளிக்க:
கறிவேப்பிலை
----------------
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து காய்கறிகள் எல்லாவற்றையும் வேகவைக்கவேண்டும்.
காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை உப்பு, சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
இந்த குருமா சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.
3 comments:
அருமை. சற்று வித்தியாசமாக செய்வதுண்டு. இந்த முறையில் முயன்றிடுகிறேன். நன்றி.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
தேய்காய்பால் வெஜ் குருமா நன்றாக இருக்கிறது.
Post a Comment