தினை 1 கப்
குதிரைவாலி 1 கப்
சாமை 1 கப்
வரகு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
அவல் 2 மேசைக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
=====
செய்முறை:
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தானியத்தையும் தனித்தனியாக 5,6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
(மாவாக தோசைக்கு கரைப்பதை விட தானியத்தை ஊறவைத்து அரைப்பது கூடுதல் ருசியைக் கொடுக்கும்)
உளுத்தம்பருப்பு,வெந்தயம் இரண்டையும் தனியே 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
அவலை தண்ணீரில் நனைத்து அரைக்கும் போது போடலாம்.
-----
முதலில் நான்கு தானியங்ககளையும் சேர்த்து கிரைண்டரில் அரைமணி நேரம் அரைக்கவேண்டும்.
பின்னர் உளுந்து,வெந்தயம் அவல்மூன்றையும் சேர்த்து அரை மணி நேரம் அரைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த இரண்டு மாவையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவேண்டும்.
மாவு 7,8 மணி நேரம் புளிக்கவேண்டும்.
சாதாரணமாக தோசை வார்ப்பது போல் வார்க்கலாம்.
சிறுதானியங்கள் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.
2 comments:
மிகுந்த சத்துக்கள் கொண்ட தோசை! சீக்கிரம் செய்து பார்க்க வேண்டும்! நல்லதொரு குறிப்புக்கு நன்றி!!
வருகைக்கு நன்றி Mano.
Post a Comment